பெங்களூருவில் ஜன.16-ல் மகளிர் மாநாடு: பிரியங்கா காந்தி உரை!

பெங்களூருவில் ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உரையாற்ற உள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார். 
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

பெங்களூருவில் ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உரையாற்ற உள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார். 

கட்சி அலுவலகத்தில் ராமநகரா மற்றும் மாண்டியா மாவட்டங்களைச் சேர்ந்த ஜேடி(எஸ்) தலைவர்களான விஸ்வநாத் மற்றும் ராதாகிருஷ்ணா ஆகியோரை அவர்களது ஆதரவாளர்களுடன் சேர்த்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கேபிசிசி தலைவர் பேசினார்.

அவர்  கூறுகையில், 

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கான தனி அறிக்கையை கட்சி திட்டமிட்டு வருவதாகவும், காங்கிரஸின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் உத்தரவாத கடிதத்தை வெளியிட விரும்புவதாகவும் அவர் கூறினார். 

மக்கள்தொகையில் 50 சதவீத பெண்கள், வாழ்வில் முன்னேற்றம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பெண்களுக்காக தனி அறிக்கை தயாரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மேலும் அவர்களிடையே தலைமைத்துவத்தை உருவாக்கி அவர்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெண்களின் முன்னேற்றத்திற்கான காங்கிரஸின் திட்டங்களை முன்னிலைப்படுத்திய அவர், தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் அறிக்கையுடன் பெண்களுக்கான "உத்தரவாத கடிதத்தை" வெளியிட விரும்புவதாகவும், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஜனவரி வரை அனைத்து தலைவர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. 

மேலும், ஜனவரி 16-ம் தேதி பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் பஞ்சாயத்து மற்றும் சமூக மட்டம் முதல் உயர்மட்டம் வரையிலான பெண் தலைவர்களின் மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநிலத்திற்கு பிரியங்கா காந்தியின் முதல் அரசியல் வருகை இதுவாகும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com