பொற்கோயிலுக்குச் செல்கிறார் ராகுல் காந்தி!

பஞ்சாபில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைத்  தரிசனம் செய்ய உள்ளார். 
பொற்கோயிலுக்குச் செல்கிறார் ராகுல் காந்தி!

பஞ்சாபில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைத்  தரிசனம் செய்ய உள்ளார். 

ஹரியாணாவில் ராகுலின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமையோடு  நிறைவடைந்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சுட்டுரை பக்கத்தில், 

116வது நாள் ஒற்றுமை நடைப்பயணம் ஹரியாணாவின் அம்பாலாவில் நிறைவு செய்துள்ளது. நாளை காலை பஞ்சாபில் கால் பதிக்க உள்ளோம் என்றார். 

அமிர்தசரஸில் உள்ள புனிதமான பொற்கோயிலுக்கு நடைப்பயணம் செய்வதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. இன்று பிற்பகல் நடைப்பயணம் இருக்காது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 

முன்னதாக இன்று காலை, அம்பாலா கண்டத்தில் உள்ள ஷாபூரிலிருந்து ராகுல் காந்தி பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.

கடந்த வியாழனன்று அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவின் பானிபட்டில் நுழைந்தது, பின்னர் அம்பாலா மாவட்டத்தில் முடிவதற்கு முன்பு கர்னால் மற்றும் குருஷேத்ரா மாவட்டங்கள் வழியாகவும் சென்றது.

செவ்வாய்க்கிழமை இரவு பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்தின் நியூ அனாஜ் மண்டியில் நிறுத்தப்பட்டு, புதன்கிழமை காலை பஞ்சாபில் மீண்டும் நடைப்பயணம் தொடங்கும். 

ஹரியாணா பயணத்தின்போது காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும், ஜம்மு-காஷ்மீரின் தலைநகரில் காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com