

உத்தரப் பிரதேசத்தின், ரேபரேலியில் குர்பக்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள தேநீர்க்கடையின் மீது சரக்கு லாரி ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனி மற்றும் மோசமான கட்சித் திறன் காரணமாக சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேநீர்க் கடையின் மீது மோதியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த 10 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் லல்லாய், லல்லு, ரவீந்திரன், விருந்தாவன் மற்றும் சிவ மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அசோக் பாஜ்பாய், ராம் பிரகாஷ் திவாரி, திபேந்திர லோதி மற்றும் ஷ்ரவன் லோதி ஆகிய நால்வரும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.