
கோப்புப் படம்
தில்லியில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான எரிவாயு விலை உயர்வு எதிரொலியாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாகவே அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. காற்று மாசு ஒரு புறம் இருக்க விலையேற்றம் மறுபுறம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
படிக்க | 200 யூனிட் மின்சாரம் இலவசம்! கர்நாடகத்தில் காங்கிரஸ் வாக்குறுதி!
இந்நிலையில் வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு சிலிண்டர் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் ஆட்டோ, டாக்சி நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தின.
வாடகை வாகனங்களில் அதிக அளவு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. இதனிடையே ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி ஆட்டோ கட்டணம் 25 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு டாக்சியில் 9 ரூபாய் 50 காசுகள் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...