புது தில்லி: அரசு விளம்பரம் என்றுகூறி, கட்சி விளம்பரம் செய்ததாகக் குற்றம்சாட்டி வரும் 10 நாள்களுக்குள் ரூ.163 கோடியை செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016 - 17ஆம் ஆண்டு, அரசுப் பணத்தை வீணடிக்கும் வகையில், அரசின் விளம்பரம் என்ற போர்வையில், கட்சிக்கு விளம்பரம் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விளம்பரங்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறியிருப்பதாகக் கூறும், தில்லி அரசின் தகவல் மற்றும் விளம்பரத் துறை இயக்குநரகம், உரிய காலத்துக்குள், பணத்தை செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஒருவேளை பணம் செலுத்தப்படாவிட்டால், ஆம் ஆத்மியின் தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்
முன்னதாக, பணத்தை செலுத்துவதற்கான ஆணையை, மத்திய அரசின் உத்தரவுப்படி தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பிறப்பித்திருப்பதாகவும், ஆனால் இதுபோன்றதொரு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



