
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்து ஒரே நாளில் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்து ஒரே நாளில் இரண்டு தொலைபேசி அழைப்புகள் அதுவும் 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வந்துள்ளன.
இதையும் படிக்க- பூலான்வலசில் சேவல் சண்டை நடைபெறாததால் சண்டை ஆர்வலர்கள் அதிர்ச்சி
இன்று காலை 11.30 மணிக்கு அதைத்தொடர்ந்து 11.40 மணிக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மர்ம தொலைபேசி அழைப்புகள் குறித்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சர் ஒருவரின் அலுவகத்திற்கு மிரட்டல் விடுத்து ஒரே நாளில் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ள சம்பவம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.