
தில்லியில் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் குளிா் அலை வீசியது. இதன் காரணமாக நகரம் கடும் குளிரில் சிக்கியது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் ஜனவரி 16 முதல் 18 வரையிலும் தில்லி - என்சிஆா் பகுதிகளில் பல இடங்களில் குளிா் அலை நிலவும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தில்லியில் கடந்த கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 2021 ஜனவரி முதல் இதுவே குறைந்தபட்ச வெப்பநிலையாகும். கடந்த 2021 ஜனவரி அன்று 1.1 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது.
நாளை வெப்பநிலை மேலும் குறைந்து 1 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஜன. 18) விடுமுறையா? - அமைச்சர் பதில்!