
கோப்புப்படம்
வருகிற புதன்கிழமை(ஜன. 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ள நிலையில், கூடுதலாக ஒருநாள் ஜனவரி 18 (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அன்பில் மகேஷ், 'ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. வருகிற புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...