ஜோஷிமட் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் ராணுவம்

ஜோஷிமட்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோஷிமட் நகரில் விரிசல்கள் விழுந்த கட்டடம்
ஜோஷிமட் நகரில் விரிசல்கள் விழுந்த கட்டடம்

ஜோஷிமட்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் ஆகிய முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அவுலி பனிச்சறுக்கு சுற்றுலா தலத்துக்கும் வாயிலாக விளங்கும் ஜோஷிமட் நகரின் நிலப்பகுதி தாழ்ந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளனா். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணியையும் தொடங்கியுள்ளது.

மேலும் சில வீடுகளில் விரிசல் விழுந்து வரும் நிலையில் பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த குழுவினர் விரிசல் விழுந்த பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், ஜோஷிமட் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டால் தயார் நிலையில் ராணுவ வீரர்களின் குழுக்கள் இருப்பதாக இந்திய ராணுவ வீரர்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய - சீனா எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரர்களில் ஒரு குழுவினர் ஜோஷிமட் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில நிர்வாகத்துடன் இணைந்து பேரிடரை சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com