தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குடியரசு தினத்தன்று சதித் திட்டம்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீரில் குடியரசு தினத்தன்று சதிச் செயலில் ஈடுபட இருந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2023, 1:56 pm

ஜம்மு - காஷ்மீரில் குடியரசு தினத்தன்று சதிச் செயலில் ஈடுபட இருந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

புட்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனைச் சாவடி அமைத்து செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் இருந்தவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்களின் பதில் தாக்குதலில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர். புட்கமில் நடைபெற்ற என்கவுண்டரில் இருந்து ஏற்கெனவே தப்பித்த இவர்கள் இருவரும் குடியரசு தினத்தன்று சதித் திட்டத்தில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும், இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.