மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவையில் பதவிக் காலம் இந்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் மூன்று மாநிலங்களிலும் உள்ள 60 சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் மூன்று மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் ஜனவரி 21ஆம் தேதியும், மேகாலாயா மற்றும் நாகலாந்துக்கு ஜனவரி 31ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது. வேட்புமனு திரும்பப் பெற திரிபுராவுக்கு பிப்ரவரி 2ஆம் தேதியும், பிற மாநிலங்களுக்கு பிப்.10 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி உள்பட நாடு முழுவதும் காலியாகவுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாநில சட்டப்பேரவை மற்றும் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com