பூஜ்ய டிகிரி செல்சியஸ்: கடும் குளிரில் சிக்கித் தவிக்கும் வடமாநிலங்கள்!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
பூஜ்ய டிகிரி செல்சியஸ்: கடும் குளிரில் சிக்கித் தவிக்கும் வடமாநிலங்கள்!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளது.பஞ்சாபில் உள்ள பதிண்டா மற்றும் ஃபரித்கோட்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அமிர்தசரஸில் 2.9 டிகிரியாகவும், லூதியானாவில் 2.8 டிகிரியாகவும், பாட்டியாலாவில் 2.6 டிகிரியாகவும், பதான்கோட்டில் 3.8 டிகிரியாகவும், குர்தாஸ்பூரில் 2 டிகிரியாகவும், மோகாவில் 0.5 டிகிரியாகவும் மொஹாலியில் 4.2 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரான சண்டிகரில் 3.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

ஹரியானாவில் நர்னால் 0.5 டிகிரியாகவும், சிர்சா 1 டிகிரியாகவும், ஹிசார் 2 டிகிரியாகவும், கர்னாலில் 2.4 டிகிரியாகவும், ரோஹ்தக்கில் 2.8 டிகிரியாகவும், அம்பாலாவில் 4.9 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக கடும் குளிரின் பிடியில்  சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com