ஒற்றுமை நடைப்பயணத்தின் எதிரிகள் இந்திய மக்களின் எதிரிகள்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்

 காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
ஒற்றுமை நடைப்பயணத்தின் எதிரிகள் இந்திய மக்களின் எதிரிகள்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியாவில் பல மாநிலங்களின் வழியாக சென்று தற்போது இறுதியாக ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தின்போது பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பலரும் அவருடன் பங்கேற்றனர். ஒற்றுமை நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி கடவுள் ராமருடன் ஒப்பிடப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் லக்கான்பூர் பகுதியில் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: ஆதி சங்கராச்சாரியாவுக்குப் பிறகு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டுள்ள முதல் நபர் ராகுல் காந்தி ஆவார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கராச்சாரியா இங்கு வந்தார். அவர் வந்தபோது ஜம்மு-காஷ்மீரில் சாலை வசதிகள் கிடையாது. அவர் காடுகளின் வழியே தனது யாத்திரையை மேற்கொண்டார். அவர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டார். ஆதி சங்கராச்சாரியாவைத் தொடர்ந்து 2-வது நபராக கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது இந்தியாவினை ஒன்றினைப்பதற்கான யாத்திரை. இந்தியாவில் வெறுப்புணர்வு விதைக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்த வைக்கப்படுகிறார்கள். காந்தி மற்றும் ராமருடைய இந்தியாவில் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். இந்த ஒற்றுமை நடைப்பயணம் இந்தியாவை ஒன்றினைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ஆகும். இந்த நடைப்பயணத்தின் எதிரிகள் இந்தியா மற்றும் இந்திய மக்களின் எதிரிகள் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com