ஒரே தட்டில் பல காலமாக உணவருந்திய அம்மா: உண்மை தெரிந்து நெகிழ்ந்து போன மகன்

தனது தாய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வளவு சிறிய தட்டிலேயே தொடர்ந்து உணவருந்தியதற்கான காரணத்தை அவர் மறைவுக்குப் பிறகு தெரிந்து கொண்ட மகன், நெகிழ்ந்துபோயிருக்கிறார்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

தனது தாய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வளவு சிறிய தட்டிலேயே தொடர்ந்து உணவருந்தியதற்கான காரணத்தை அவர் மறைவுக்குப் பிறகு தெரிந்து கொண்ட மகன், நெகிழ்ந்துபோயிருக்கிறார்.

நமது பெற்றோருக்கு பொதுவாகவே ஏதேனும் ஒரு பழக்கம் இருக்கும். அந்த பழக்கம் விநோதமாகவும் இருக்கலாம். சில பிள்ளைகள் அதற்கான காரணத்தை அறிந்து வைத்திருப்போம். சிலர் இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்று பரிகாசத்தோடு நகர்ந்திருப்போம்.

அவ்வாறு, தனது தாய் பல காலமாக பின்பற்றிய ஒரு செயலை நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார் விக்ரம் புத்தநேசன்.

ஒரு சிறிய தட்டு. அதில்தான், விக்ரமின் தாயார் உணவருந்துவாராம். எத்தனையோ முறை வேறு தட்டில் சாப்பிடுமாறு வலியுறுத்தியும் அதனை அவர் மாற்றிக்கொள்ளவேயில்லையாம். இத்தனை காலத்துக்குப் பிறகு, தனது தாய் இறந்த பிறகு, உறவினர்களிடம் இந்த தட்டுப் பற்றி பேசும்போதுதான் அவருக்கு அந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

இது பற்றி அவர் கூறுகையில், இது என்னுடைய தாய் உணவருந்தும் தட்டு. இதனை கடந்த 20 ஆண்டுகாலமாக அவர் பயன்படுத்தி வருகிறார். இது மிகச் சிறிய தட்டு. ஆனால், தற்போது அவர் இறந்த பிறகுதான், எனது சகோதரி மூலமாக, தெரிய வந்தது, இது நான் பள்ளியில் படிக்கும்போது போட்டியில் வென்று பரிசாகப் பெற்ற தட்டு என்பது.

1999ஆம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, இந்த தட்டினை பரிசாக வென்றுள்ளேன். இந்த 24 ஆண்டு காலமும், எனது தாய் நான் வெற்றி பெற்ற இந்த தட்டில்தான் உணவருந்தியுள்ளார். எவ்வளவு பெரிய மனது பாருங்கள். இத்தனைக்கும் இந்த உண்மையைக் கூட அவர் என்னிடம் சொல்லியதில்லை. அம்மா உன்னை மிகவும் நேசிக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com