
ஜோஷிமத் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு
புது தில்லி: தலைநகர் தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது.
புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே குளிர் அலையில் தத்தளித்து வரும் தேசிய தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா்த்தியான மூடுபனியால் காண்பு திறன் குறைந்தது. இதனால், பல ரயில்கள் குறைந்த காண்பு திறன் காரணமாக தாமதமாக இயங்கி வருகின்றன.
இதையும் படிக்க | ராஜஸ்தான்: அசோக் கெலாட் - பைலட் மீண்டும் மோதல்
தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் அடர்த்தியான மூடுபணி காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
16 ரயில்கள் ஒன்றரை மணி நேரம் முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...