
ஹேக்கர்களால் முடக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான ஆர்சிபிட்வீட்ஸ் இன்று அதிகாலை 4 மணிக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள் அதன் முகப்புப் படத்தை மாற்றினர்.
இதையும் படிக்க- தில்லியில் காங்கிரஸ் தலைவருடன் சித்துவின் மனைவி சந்திப்பு
மேலும் NFT தொடர்பான ட்வீட்களையும் அதில் பதிவிட்டிருந்தனர். இதனை அறிந்த ஆர்சி ரசிகர்கள் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதை இணையதளங்களில் வைரலாக்கினர். இதைத்தொடர்ந்து ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆர்சிபி நிர்வாகம் இறங்கியது.
தற்போது அதற்கு பலன் கிடைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களிடமிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.