
மல்லிகாா்ஜுன காா்கே
தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து இன்று சந்தித்தார்.
தொடர்ந்து ஜன்பத்தில் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரையும் சந்தித்து அவர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
அவரது இந்த சந்திப்பின்போது பஞ்சாப் மாநில காங்கிர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கௌதம் சேத் உடன் இருந்தார்.
முன்னதாக திங்களன்று, ஜலந்தர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சித்து தனது மகன் கரண் சித்துவுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...