
கோப்புப்படம்
பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகிலிருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் வந்ததுள்ளது. அப்போது இதன் சத்தத்தைக் கேட்டு சுதாகரித்துக்கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் அமிர்தசரஸ் காவல்துறையின் கூட்டு ரோந்துக் குழுவினர் கக்கர் கிராமத்தில் உள்ள லோபோக் பகுதியில் ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.
மேலும் 5 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இத்தகவலை பஞ்சாப் டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். "ஏகே-47ல் இருந்து மொத்தம் 12 ரவுண்டுகள் சுடப்பட்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன், அமெரிக்கா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களுடன் கூடியது. என்று அவர் மேலும் கூறியுள்ளார். முன்னதாக ஜனவரி 19 ஆம் தேதி, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் பிடிபட்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க- தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேலும் 6.150 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது, 3 பேர் தலைமறைவாகினர். இதுவரை கடத்தலில் சிக்கிய அனைத்து கடத்தல்காரர்களும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...