ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு...!

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு (PAN CARD) என்பது அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஆவணமாகும். 
பான் கார்டு (கோப்புப்படம்)
பான் கார்டு (கோப்புப்படம்)
Updated on
1 min read

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு (PAN CARD) என்பது அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஆவணமாகும்.  அனைத்து வகையான நிதிப் பரிவர்த்தனைகளையும் வருமான வரித் துறை கண்காணிக்கும்  ஒரு முக்கியமான ஆவணம் பான் கார்டு ஆகும்.

ஒரு நபர் ஒரு பான் கார்டை மட்டும் வைத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை சட்டத்தின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட வைத்திருநந்தால் பான் கார்டை ரத்து செய்வது மட்டுமில்லாமல், அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

எனவே, உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். நீங்கள் விருப்பத்துடன் இதைச் செய்தால்,  சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டீர்கள். இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விருப்பங்கள் உள்ளன.

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.10000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக, வருமான வரித் துறை வெளியிட்ட பொதுமக்களுக்கான அறிவுறுத்தலில், ‘பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்; அவசியம். எனவே, தாமதிக்காமல் உடனே இணையுங்கள்’  எனவும், மேலும், ‘வருமான வரிச் சட்டம் 1961-இன்கீழ், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர பிற அனைத்து பான் அட்டைதாரா்களும் 2023 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம். அவ்வாறு இணைக்கப்படாத பான் அட்டைகள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயலற்றதாகிவிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com