தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Published on

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு இன்று காலை 8.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.

மொத்தம் 105 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து காலை 9.17 மணிக்கு மீண்டும் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் மேலாண்மை அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் மீண்டும் பிற்பகலில் விமானம் புறப்பட்டுச் செல்லும் என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com