
பாகிஸ்தானில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நகரங்கள்: நடுவழியில் நிற்கும் ரயில்கள்
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி, லாகூர் உள்பட முக்கிய நகரங்கள் மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கின்றன.
பல மின்சார ரயில்கள் பாதி வழியில் நின்றுவிட்டதாகவும், மேம்பாலத்தில் இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து பயணிகள் இறங்கி நடந்து செல்லும் விடியோக்களும் டிவிட்டரில் வெளியாகி வருகிறது.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
நாட்டில் மின்சார விநியோக முறை சீர்குலைந்த காரணத்தால், தலைநகர் உள்பட பல முக்கிய நகரங்கள் திங்கள்கிழமை காலை முதல் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக நாட்டின் எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் மின் தேவையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. குடிபோதையில்.. பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த மும்பைப் பெண்
இன்று காலை 7.34 மணிக்கு இந்த சிக்கல் நேரிட்டதாகவும், இதனால், நாடு முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவாக இதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனினும், 12 மணி நேரம் ஆகலாம் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.