திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பஞ்சாபில் பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளோம்: முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாபில் பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 ஜனவரி 2023, 9:19 am IST

பஞ்சாபில் பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இரண்டு நாள் பயணமாக நேற்று மும்பை சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவரை ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்றனர். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். இங்கு மாநிலத்தின் பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கிறேன். மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று அறியப்படுகிறது.

மேலும் பல்வேறு முதலீட்டாளர்களை பஞ்சாபிற்கு அழைப்பதும் நல்லது. முந்தைய அரசு மாநிலத்தின் தொழில், கல்வி மற்றும் விவசாயக் கொள்கையை சீரழித்துவிட்டது. நான் முதலீட்டாளர்களை பஞ்சாபிற்கு அழைக்கிறேன். மேலும் நாங்கள் பஞ்சாபில் ஒரு பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளோம். மும்பையில் உள்ள திரைப்பட ஸ்டுடியோக்கள் பஞ்சாபிலும் தங்கள் ஸ்டுடியோக்களை நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பஞ்சாபி சினிமா துறையையும் பாலிவுட்டையும் இணைக்க இங்கு வந்துள்ளேன். பாரத் ஜோடோ யாத்ரா குறித்து கேட்டதற்கு, காங்கிரஸுக்குள்ளேயே பல சர்ச்சைகள் உள்ளன, நாட்டின் ஒற்றுமைக்கு செல்லும் முன் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி முதலில் இணைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.