வாரம் 2 நாள்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
சுருக்குமடி வலைகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மீனவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
அதன்படி, வாரத்தில் இரண்டு நாள்கள் அதாவது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கடலில், 12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுளள்து.
மேலும், பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய டிராக்கிங் சிஸ்டம் கருவியைப் பொருத்தியிறுக்க வேண்டும். நாட்டுப் படகு மீனவர்களும் விசைப்படகு மீனவர்களும் சமமான பலனைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.