2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது.
"மோடி கேள்வி" பற்றிய பிபிசி ஆவணப்படம் இரண்டாம் பாகத்தின் நல்ல இணைப்பு கிடைத்துள்ளது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவை இணைத்துள்ளார்.
இதையும் படிக்க.. விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே குஜராத் கலவர ஆவணப்படம் உருவாக்கம்
''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.
Watch: A good link to the BBC documentary part 2 on "The Modi question", which our govt is trying to prevent people from seeinghttps://t.co/L1MKztu1c1
â Prashant Bhushan (@pbhushan1) January 25, 2023
இந்தியா: மோடி மீதான கேள்வி இரண்டாம் பாகத்தின் விடியோ, " இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோர், இந்த ஆவணப்படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
காரணம், அவர்களது பாதுகாப்புக் கருதி.
இதில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துக் கூறவும் இந்திய அரசு மறுத்துவிட்டது என்ற பதிவுடன் தொடங்குகிறது.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், யூடியூப் விடியோ மற்றும் அதன் இணைப்புகளைக் கொண்ட டிவிட்டர் பகுதிகளை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது. அதன் முதல் பாகம் அண்மையில் வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஆவணப்படத்தில் மோடி குறித்து பல்வேறு ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில்தான், தற்போது இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விடியோ யூடியூப்பில் வெளியாகாமல் புதிய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் சமூகத்தினா் இடையே 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதல் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஷின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடித் தொடா்பிருப்பதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது சா்வதேச அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதே வேளையில், விரிவான ஆய்வுக்குப் பிறகே ஆவணப்படம் உருவாக்கப்பட்டதாக பிபிசி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!
இருளர் இன மக்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் பெண்!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

எனது வெற்றி பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



