ஆர்பிஐ உடனான ஆலோசனைக்குப் பிறகு பழக்கடையில் ஆனந்த் மஹிந்திரா செய்த செயல்!

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு சாலையோரமிருந்த பழக்கடைக்குச் சென்று இணையவழி பணப்பரிவர்த்தனை செய்து பழங்களை வாங்கினார். இது தொடர்பான விடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்திய தொழில் முனைவோர்களின் ஒருவரான ஆனந்த மஹிந்திரா, சமூக வலைதளங்களில் சுவாரசியமான விடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். 

அந்தவகையில், தற்போது சாலையோர பழக்கடையில் இணையவழி பணப்பரிவர்த்தனை மூலம் பழங்கள் வாங்கியுள்ள விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  அதில் இணையவழி பணப் பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டேன். அந்த ஆலோசனைக்குப் பிறகு அருகில் சாலையோரம் பழக்கடை வைத்திருந்த பச்சே லால் சஹானியை சந்தித்தேன். அவரிடம் முதல் முறையாக இணைய பணப் பரிவர்த்தனை செய்து பழங்களை வாங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com