எகிப்து உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு: பிரதமர் மோடி

எகிப்து உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
எகிப்து உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு: பிரதமர்  மோடி
Published on
Updated on
1 min read

எகிப்து உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க அதிபா் எல்-சிசி நேற்று தில்லி வந்தடைந்தார். மூன்று நாள்கள் அரசுமுறை பயணமாக மேற்கொண்டுள்ள ஃபத்தா எல்-சிசியுடன் 5 அமைச்சா்களும், மூத்த அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனா்.

இந்நிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த ஃபத்தா எல்-சிசிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் எகிப்து அதிபர் பங்கேற்றார். இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பான செய்தியறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

அதில், “இந்தியா முழுமைக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொண்ட விஷயமாகும்.  எகிப்தை சேர்ந்த ராணுவ அணியினரும், நமது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று அதற்கு புகழ் சேர்ப்பது குறித்தும்  நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகின் தொன்மையான நாகரீகங்களில் இந்தியாவும், எகிப்தும் இடம்பெறுகின்றன. நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான உறவை கொண்டிருக்கிறோம். நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்துடனான வாணிபம், குஜராத்தில் உள்ள லோத்தல் துறைமுகம் மூலம் நடந்துள்ளது. உலகில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ள போதும், நமது உறவுகள் நிலையாக உள்ளன. நமது ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது.

இன்றைய சந்திப்பின் போது ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு நிலையில் இருதரப்பு பங்கேற்பை அதிகப்படுத்த அதிபர் சிசியும், நானும் முடிவு செய்துள்ளோம். இந்தியா-எகிப்து ராணுவ ஒத்துழைப்பின் கீழ் அரசியல், பாதுகாப்பு பொருளாதாரம், அறிவியல் துறைகளில் மாபெரும் ஒத்துழைப்புக்கான நீண்டகால கட்டமைப்பை மேம்படுத்துவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

பரஸ்பர முதலீடு மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பது அவசியம் என்றும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com