அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த 23 வயது மகன்!

ஒரு ஆண் மனைவியை இழந்தபிறகு மறுமணம் செய்துகொண்டால் அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், இதுவே ஒரு பெண், கணவனை இழந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள முன்வந்தால் பலர் விமர்சிக்கின்றனர்.
அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுடன் செல்பி எடுக்கும் யுவராஜ்
அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுடன் செல்பி எடுக்கும் யுவராஜ்

மகாராஷ்டிரத்தில் விபத்தில் தந்தையை இழந்த மகன் தனது தாயிக்கு மறுமணம் செய்து வைத்த நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. பொதுநிகழ்ச்சிகளில் தாய் கலந்துகொள்வது குறைந்ததாலும், வாழ்நாள் முழுவதும் துணையாக ஒருநபர் வேண்டும் எனவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் கோகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் சீலே. 23 வயதான இவர் தனது 18வது வயதில் விபத்தில் தனது தந்தையை இழந்துள்ளார். இதனால், அவரின் தாயார் ரத்னா மிகுந்த கவலையில் இருந்துள்ளார். 

தந்தையை இளம் வயதிலேயே இழந்தது வருத்தமாக இருந்தாலும், கணவரைப் பிரிந்த துயரால் தாய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

மேலும், பலர் வீடுதேடி வந்து அழைத்தபோதும் பல சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்துள்ளார். கோகல்பூர் போன்ற கிராமப்புற பகுதிகளில் கணவரை இந்த பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து யுவராஜ் அவ்வபோது எதிர்ப்பு தெரிவிப்பராக இருந்துள்ளார். 

இந்நிலையில், தாயின் தனிமையை புரிந்துகொண்ட யுவராஜ், 45 வயதாகும் தனது தாயிக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மூன்று ஆண்டுகளாக தனது தாயிடம் பேசி ஒப்புக்கொள்ளச் செய்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து நண்பர்கள் உதவியுடன் அம்மாவுக்கு ஏற்ற துணையைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக மாருதி கன்வந்த் என்பவரை தாயிக்கு உற்ற துணையாக தேர்வு செய்து, திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளார். 

இதற்காக உறவினர்களிடம் பேசி அனைவரையும் சம்மதிக்க வைத்துள்ளார். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அவர் தனது தாயிக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். 

இது குறித்து பேசிய யுவராஜ், ஒரு ஆண் மனைவியை இழந்தபிறகு மறுமணம் செய்துகொண்டால் அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், இதுவே ஒரு பெண், கணவனை இழந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள முன்வந்தால் பலர் விமர்சிக்கின்றனர். ஏன் பெண்கள் மறுமணம் செய்துகொள்ளக்கூடாது என்று தோன்றியது. இதனால், எனது தாயிடம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரை ஒப்புக்கொள்ளச்செய்தேன். 

இன்று என் தாயிக்கு திருமணம். இது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். என் தாயிக்கு ஏற்ற துணையை நான் தேடிக் கண்டறிந்துள்ளேன் என நெகிழ்ச்சியடைந்தார். 

யுவராஜின் தாயை திருமணம் செய்துகொண்ட மாருதி கன்வந்த், ரத்னாவை பார்த்து அவரிடம் பேசிய பிறகு எனக்கு திருமணம் செய்துகொள்ள உடன்பாடு ஏற்பட்டது. ரத்னாவின் குடும்பம் நேர்மையானது. அவர்களுடன் நான் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com