பாதுகாப்பு மீறல்: ராகுலின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு விதிமீறல் காரணமாக ராகுலின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
பாதுகாப்பு மீறல்: ராகுலின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு விதிமீறல் காரணமாக ராகுலின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

பாதுகாப்பை மீறியதாகவும், கூட்டத்தை நிர்வகிக்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தவறியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணம் காசிகுண்ட் அருகே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

காந்தி தலைமையிலான நடைப்பயணத்துக்கு காஷ்மீர் நிர்வாகம் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது என்று ஏஐசிசி நிர்வாகி ரஜினி பாட்டீல் ட்வீ‘ட் செய்துள்ளார். 

காசிகுண்டை அடைந்த பிறகு திட்டத்தின்படி தெற்கு காஷ்மீரில் உள்ள வெசுவை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆனால் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் நிர்வகிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரியவந்தது. 

ராகுல் காந்தியின் மீது பாசத்தைக் காட்ட மக்கள் கூட்டம், ராகுலின் அருகருகே அலைமோதியது. எனவே, காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவிய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

உரியப் பாதுகாப்பு கிடைக்கும்வரை மீண்டும் நடைப்பயணம் தொடங்கப்படாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com