
தேசியவாத கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கலக்கமடையவில்லை எனவும், புதிதாக அவரால் கட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடனான மோதல் காரணத்தினால் கட்சியிலிருந்து அஜித் பவார் விலகினார். அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். பாஜகவில் இணைந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க: மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்
இந்த நிலையில், தேசியவாத கட்சியில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கலக்கமடையவில்லை எனவும், புதிதாக அவரால் கட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
महाराष्ट्राच्या राजकारणाचे साफ मातेरे करण्याचां विडा काही लोकांनी उचलला आहे.त्यांना त्यांच्या मार्गाने जाऊ द्या.
— Sanjay Raut (@rautsanjay61) July 2, 2023
माझे आताच श्री.शरद पवार यांच्याशी बोलणे झाले.ते म्हणाले" मी खंबीर आहे.लोकांचा पाठिंबा आपल्याला आहे. उद्धव ठाकरें सह पुन्हा सर्व नव्याने उभे करू.". होय,जनता हे खेळ फार… pic.twitter.com/fsBbIZGoFE
அந்தப் பதிவில் அவர் கூறிருப்பதாவது: நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரிடம் பேசினேன். மக்கள் ஆதரவு நமக்கு இருக்கிறது. நான் உறுதியாக இருக்கிறேன். மக்கள் நம் பின்னால் இருக்கிறார்கள். நாம் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து புதிதாக தொடங்குவோம் என அவர் தெரிவித்தார். சிலர் மகாராஷ்டிர அரசியலை முழுவதுவமாக சீர்குலைக்க உறுதியாக இருக்கிறார்கள். இது போன்ற விஷயங்களை மக்கள் இனி சகித்துக் கொள்ள மாட்டார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...