சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஹைதராபாத் வந்துள்ளார்.
முர்முவை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் பல மாநில அமைச்சர்கள் அவரை ஹக்கிம்பேட் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று முர்மு உரையாற்ற உள்ளார். கடந்தாண்டு ஜூலை 4-ம் தேதி ஆந்திரத்தின் பீமாவரத்தில் சீதராமா ராஜுவின் 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
1897 ஜூலை 4ல் பிறந்த அல்லூரி சீதாராம ராஜு, பழங்குடி சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர். 1922ல் தொடங்கப்பட்ட ராம்பா கலகம் எனப்படும் போராட்டத்தை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








