தில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

தில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

தில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்குரைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தில்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே. மனன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மனன் தெரிவித்துள்ளார். 

மேலும், ஆயுதங்களுக்கு உரிமம் உள்ளதா, இல்லையா என்று விசாரிக்கப்படும் என்றும், ஆயுதங்களுக்கு உரிமம் இருந்தாலும் வழக்குரைஞரோ அல்லது வேறு யாரோ, நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதியில்லை மனன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com