

மும்பையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
பிரிஹன்மும்பையில் நேற்றிரவு கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பேருந்துகள் சியோனில் திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தாதர், மஹிம், கார், மாதுங்கா மற்றும் குர்லா போன்ற சில பகுதிகள் கடந்த 12 மணி நேரத்தில் 40 மிமீ முதல் 70 மிமீ வரை மழையைப் பதிவு செய்தன. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகள் சராசரியாக 54.28 மிமீ முதல் 48.85 மிமீ மற்றும் 51.07 மிமீ மழை பதிவு செய்தன.
இந்நிலையில் இன்று மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.