
புதிதாக அறிமுகமாகியுள்ள 'திரெட்ஸ்' சமூக வலைத்தள செயலியில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் இணைந்து வருகின்றனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியை ஜூலை 6 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகமான இரண்டு நாள்களில் 7 கோடி(சனிக்கிழமை காலை நிலவரப்படி) பேர் இதில் இணைந்துள்ளனர்.
இதில் நாடு முழுவதும் உள்ள அரசியல், திரையுலக, விளையாட்டு பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர்கள்
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திரெட்ஸில் இணைந்துள்ளனர்.
இதையும் படிக்க | அடுத்தது பிகார்?
மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்தும் திரெட்ஸில் உள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யான கனிமொழியும் இதில் உள்ளனர்.
திரை, கிரிக்கெட் பிரபலங்கள்
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், நடிகர், நடிகைகள் கஜோல், மாதுரி தீட்சித், அபிஷேக் பச்சன், அல்லு அர்ஜுன், ஜூனியர்.என்டிஆர், டாப்ஸி, சிரஞ்சீவி, தமன்னா, மகேஷ் பாபு, மிருணால் தாக்கூர், அலி ஃபசல், சோனாக்ஷி சின்ஹா பரினிதி சோப்ரா, அனிருத், சன்னி லியோன், இயக்குநர் செல்வராகவன், மஞ்சு வாரியர், மிருணாளினி ரவி உள்ளிட்ட திரை பிரபலங்கள்
சன் பிக்சர்ஸ், லைக்கா ப்ரொடக்ஷன் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களும்
கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ரிஷப் பந்த், சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும்
ஈஷா யோக மையத் தலைவா் சத்குரு ஜக்கி வாசுதேவ்,
அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் உள்ளிட்ட 15 பணக்காரர்களும் திரெட்ஸில் கணக்கு வைத்துள்ளனர்.
மேலும் பல்வேறு செய்தித்தாள் மற்றும் ஊடக நிறுவனங்களும் உடனடியாக திரெட்ஸுடன் இணைந்துள்ளன.
தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இணைந்து வருவது திரெட்ஸ் செயலியை வரவேற்பதாகவே உள்ளது.
இதையும் படிக்க | ட்விட்டருக்கு சவால்விடும் திரெட்ஸ்! எப்படி இணைவது? என்ன பயன்? பிளஸ், மைனஸ்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...