தொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஹிமாசலில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

கனமழை காரணத்தால் ஹிமாசலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published On :

கனமழை காரணத்தால் ஹிமாசலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாசலில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஹிமாசலின் அனைத்து ஆறுகளிலும்  கனமழை காரணமாக நீர் நிரம்பி காணப்படுகிறது. வானிலை மையம் ஹிமாசலின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் 14 இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 13 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 700 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிம்லா மாவட்டத்தில் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹிமாசலின் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.