
கோப்புப்படம்
ஒடிசா மாநிலத்தில் பட்டப்படிப்பு பயிலும் எஸ்டி, எஸ்சி மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
பழங்குடி ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல்வர் பட்நாயக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கூறியது,
மாநிலத்தில் அரசு நிறுவனங்களில் பட்டப்படிப்பு பயிலும் எஸ்டி, எஸ்சி மாணவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்தாண்டிலிருந்து வழங்கப்படும்.
சமூக-பொருளாதார மக்களை உயர்த்துவதற்கான முக்கிய ஆயுதம் கல்வி, எந்தவித காரணத்துக்காகவும் அது தடைப்படக்கூடாது. பழங்குடியின மாவணர்வளுக்கு குடியிருப்பு வசதிகளை வழங்குவதில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக ஒடிசா திகழ்கிறது.
படிக்க: குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார்?
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் எஸ்டி மற்றும் எஸ்சி மேம்பாட்டுத் துறையின் கீழ் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 215 முதல் 422 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் எஸ்டி, எஸ்சி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக 62 உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் மாநில அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
எஸ்சி, எஸ்டி மக்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக அரசு கவனம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...