குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ், ஆன்ட்ரியன் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் விசித்ரா முதல் இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக மைம் கோபியும், மூன்றாவது இறுதிப் போட்டியாளராக சிவாங்கியும், நான்காவது இறுதிப் போட்டியாளராக சுருஸ்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், யாரும் எதிர்பாராத விதமாக கிரண் ஐந்தாவது இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், வைல்டு கார்டு சுற்றின் மூலம் ஆன்ட்ரியன் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: விஜய் தந்தை நடிக்கும் கிழக்கு வாசலில் ஆனந்த் பாபு!
கடந்த எலிமினிஷென் சுற்றில் ஆன்ட்ரியன் வெளியேறிய நிலையில், அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


