விஜய் தந்தை நடிக்கும் கிழக்கு வாசலில் ஆனந்த் பாபு!

விஜய் தந்தை நடிக்கும் கிழக்கு வாசலில் ஆனந்த் பாபு!

ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார். 
Published on

நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் கிழக்கு வாசல் என்ற புதிய தொடரில் ஆனந்த் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் அவ்வபோது புதிய தொடர்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு தொலைக்காட்சி தொடர்கள் விரைவில் முடியவுள்ள நிலையில், கிழக்கு வாசல் என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிகர் ஆனந்த் பாபு வில்லன் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார். 

இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ சமீபத்தில் வெளியானது. அதில் ஆனந்த் பாபு நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

ஆனந்த் பாபு ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சூலம், குலவிளக்கு, மனைவி, கஸ்தூரி, மெளன ராகம், முத்தழகு, மெளன ராகம்-2 போன்ற தொடர்களில் அவர் நடித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com