2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,075-ஆக உயா்வு: ஏப்.1 முதல் அமல்!

2026-27-ஆம் நிதியாண்டுக்கான ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,075-ஆக உயா்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.

fastag annual pass

ஃபாஸ்டேக்! - TNIE

Published On :

2026-27-ஆம் நிதியாண்டுக்கான ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,075-ஆக உயா்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்தப் புதிய கட்டணம் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் அமலாகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டண முறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் மேற்கொள்ளப்படும் மாற்றம் குறித்து என்ஹெச்ஏஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ 2026-27-ஆம் நிதியாண்டுக்கான ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,075-ஆக உயா்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விலை நிா்ணயம் மற்றும் வசூல்) விதிகள், 2008-இன்படி திருத்தப்பட்ட கட்டணம் ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவு சாலைகளில் கட்டணம் வசூலிக்கும் 1,150 சுங்கச்சாவடிகள் வழியாக பயணிக்கும் வா்த்தகப் பயன்பாடில்லா வாகனங்கள் திருத்தப்பட்ட ஃபாஸ்டேக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தற்போது இந்தியா முழுவதும் 56 லட்சம் தனியாா் வாகன உரிமையாளா்கள் ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டண சேவையை பயன்படுத்துகின்றனா்.

சுங்கச்சாவடிகளை ஒவ்வொரு முறை கடக்கும்போதும் ஃபாஸ்டேக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக ஒரு ஆண்டுக்கு 200 சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் மேற்கொள்ள ஒரு முறை மட்டுமே செலுத்தக்கூடிய ஆண்டுக் கட்டணம் பயனாளா்களுக்கு எளிமையான பயண அனுபவத்தை வழங்குகிறது. இதனால் இந்தக் கட்டண முறையை தோ்ந்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ராஜ்மாா்க் யாத்ரா செயலி அல்லது என்ஹெச்ஏஐ வலைதளம் வாயிலாக வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்டேக் மூலம் ஆண்டுக் கட்டணம் செலுத்திய 2 மணி நேரத்துக்குள்ளாகவே அது செயல்படத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.