பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!

ஃபாஸ்டேக் ஆண்டுக்கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து...

fastag

ஃபாஸ்டேக் கட்டண உயர்வு - கோப்புப் படம்

Published On :

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிவிப்புப்படி ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலை பயனர்களின் கவனத்திற்கு! 2026–27 நிதியாண்டில் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் ரூ. 3,000 ஆக இருந்த ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ. 3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுமார் 1,150 சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் முறை பயன்படுத்தப்படுகின்றன. வணிக நோக்கமல்லாத வாகனங்களுக்கு ஒரு வருடம் அல்லது 200 முறை சுங்கச் சாவடியைக் கடப்பதற்கு செல்லுபடியாகும் ஒரு முறை கட்டணம் ரூ. 3,075 செலுத்துவதன் மூலம் வசதியான பயணத்தை வழங்குகிறது.

56 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களுடன், ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தைத் தொடர்ந்து வழங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The annual FASTag fee has been increased as announced by the National Highways Authority of India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.