சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்...

News image

மதுக் கடைகள் மூடல்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:58 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப். 21- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை 3 நாள்கள், தோ்தல் வாக்கு எண்ணிக்கை அன்று (மே 4) அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்லை முன்னிட்டு வாக்குப்பதிவு அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் உள்ளிட்டவை வரும் ஏப். 21 முதல் (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 -ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 4 -ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. விதிகளுக்கு மாறாக, மது விற்பனை ஏதும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.