எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? என்பது தொடர்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதைப் பற்றி...

News image

கோடை விடுமுறை!

Updated On :9 ஏப்ரல் 2026, 2:57 pm

தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு ஏப். 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஏப். 10 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுவதால், பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதையடுத்து 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்புக்கான விரிவான தோ்வுக் கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

அதன்படி, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் ஜூன் 1ஆம் தேதியான திங்கள்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், “அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப். 16 ஆம் தேதி நிறைவடைகின்றன. ஏப். 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

ஏப். 25ஆம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி / யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 1-3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்” என தெரிவிக்கப்படுகிறது.

Summary

Summer holidays have been announced for students of all types of government schools in Tamil Nadu, effective from April 17th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.