புதிய தொகுப்பாளருடன் தமிழா தமிழா நிகழ்ச்சி!

தமிழா தமிழா நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொகுப்பாளருடன் தமிழா தமிழா நிகழ்ச்சி!

தமிழா தமிழா நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த தமிழா தமிழா விவாத நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் புதிய தொகுப்பாளருடன் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியை முன்னதாக கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி இருந்தார். அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடன் ஏற்பட்ட சில கருத்துவேறுபாடு காரணமாக தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு விலகினார்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை புதிதாக ஆவுடையப்பன் என்பவர் ஜூலை 16 ஆம் தேதி முதல் தொகுத்து வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணியாற்றியவர்.

தமிழா தமிழா நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com