
மணாலி: ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளும், கட்டடங்களும் நீரில் மூழ்கிய காட்சிகள் காண்போரை பதற வைக்கின்றது.
ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீரிலும் கடந்த 3 நாள்களாக கனமழை முதல் அதீத கனமழை வரை பதிவானது.
தொடர் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 44 பேர் பலியாகியுள்ளனர்.
ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, ஏராளமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டடங்களும், வீடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய சேவைகள்கூட கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தற்போது மழையின் தீவிரம் குறைந்து மீட்புப் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ள நிலையில், மழையால் உருக்குலைந்துள்ள பகுதிகளை டிரோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
ஹிமாசலில் ஏற்பட்டு சேதத்தை உலகிற்கு காண்பிக்கும் இந்த காணொலி அனைவரையும் பதறவைத்துள்ளது.