எதிரணியினரை பிளவுபடுத்த மோடி அரசு பயன்படுத்தும் ஸ்கிரிப்ட்: கார்கே கண்டனம்
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைகளை நாங்கள் கண்டிக்கிறோம். எதிரணியினரை மிரட்டுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் மோடி அரசின் யூகிக்கக்கூடிய ஸ்கிரிப்டாக இது மாறிவிட்டது.
ஆச்சரியம் என்னவென்றால், சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தில் பாஜக திடீரென முனைப்பு காட்டி வருகிறது. மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயகத்தை மிதிக்க இந்த கோழைத்தனமான தந்திரங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடுமாறக் கூடாது' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.