
அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க | எங்களுக்காக அமலாக்கத்துறை தேர்தல் பிரசாரம்: முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, 'அமலாக்கத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்டி அடுமைப்படுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை என்றாவது சோதனை நடத்தியுள்ளதா?
எதிர்கட்சிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள பாஜகவுக்கு திராணி இல்லை. பாஜகவின் அரசியல் பிரிவாகவே அமலாக்கத்துறை செயல்படுவதாக மக்கள் கருதுகிறார்கள்.
அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும். தமிழ் மண்ணில் பாஜக தோல்வியடையும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.