பார்வையற்றோருக்கான நோட்டுகள் தற்போது சாத்தியமில்லை: ஆர்பிஐ

பார்வையற்றவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் புதிய நோட்டுகளை தற்போது அச்சிடுவது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Published on
Updated on
1 min read

மும்பை: பார்வையற்றவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் புதிய நோட்டுகளை தற்போது அச்சிடுவது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பார்வையற்றவர்கள் கண்டறிவதில் சிரமம் இருப்பதால் புதிதாக நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று தேசிய பார்வையற்றோர் சங்கம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வின் முன்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “கவனமாக பரிசீலிக்கப்பட்ட பிறகுதான் புதிய நோட்டுக்ளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பல மதிப்பிலான நோட்டுகள் வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்டு வருகின்றது. புதிதாக நோட்டுகள் வந்தால் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக குழப்பத்தை உண்டாக்கும்.

2022-2023-ஆம் ஆண்டில், பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளை மீண்டும் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடுவதற்கு மட்டும் ரூ.4,682.80 கோடி வருடாந்திர செலவாக உள்ளது.

புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் தற்போதைய செலவைவிட அதிகமானதாகவும், அதிக நேரத்தை எடுக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீண்டும் புதிய நோட்டுகள் அச்சிடும்போது பார்வையற்றவர்களுக்காக தேசிய அளவில் இயங்கக்கூடிய அமைப்புகளின் ஆலோசனையை பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் பிரமாணப் பத்திரத்துக்கு தேசிய பார்வையற்றோர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com