பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மணிப்பூர்: குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி அசாமில் மகளிர் காங்கிரஸ் போராட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி அசாமில் மகளிர் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Published On :

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி அசாமில் மகளிர் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.

இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில், கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மணிப்பூர் நிலவரத்தைக் கண்டித்து, குறிப்பாக இரு பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரியும் அசாமில் மகளிர் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இது மனிதாபிமானமற்ற செயல், நாகரிக சமுதாயத்தின் மீதான தாக்குதல் ஆகும். இதை நம்மால் மறுப்பு தெரிவிக்கவே முடியாது. இந்திய சமூக வாழ்க்கையில் மிகக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அசாமின் மகளிர் காங்கிரஸ் குழுவின் தலைவர் மீரா போர்தகூர் கோஸ்வாமி தெரிவித்தார். 

மாநில அரசைக் கலைத்து உடனே மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.