முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு வர கைகூப்பிக் கேட்கிறேன்: அனுராக் தாக்குர்

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வருமாறு எதிர்க்கட்சிகளை கைகூப்பி கேட்டுக் கொள்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:11 am IST

‘மணிப்பூா் விவகாரத்தை அரசியலாக்குவதை விடுத்து, நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென எதிா்க்கட்சிகளுக்கு இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், மணிப்பூா் வன்முறையை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மணிப்பூா் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம், இந்த விவகாரத்தில் விவாதத்துக்கு தயாா் என்று உறுதிபட தெரிவித்த மத்திய அரசு, ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிப்பாா்’ என்று கூறியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 நாள்களாக முடங்கிய நிலையில், மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகளை எதிா்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது.

பெண்கள் மீதான அராஜகங்கள் வேதனைக்குரியவை. பாதிக்கப்பட்டவா்கள் எந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும்.

ராஜஸ்தான், பிகாா், மேற்கு வங்கம், மணிப்பூா் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆக்கபூா்வமான விவாதம் நடைபெற வேண்டுமென்பதே மத்திய அரசின் விருப்பம். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதத்தில் பங்கேற்க வேண்டும். யாரும் விலக ஓட வேண்டாமென இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்.

மணிப்பூா் விவகாரத்தில் விவாதம் கோரி போராட்டத்தில் ஈடுபடும் எதிா்க்கட்சிகள், விவாதத்தில் பங்கேற்காமல் விலகி ஓடுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினாா் அனுராக் தாக்குா்.

மணிப்பூா் கலவரத்தில், 2 பழங்குடியினப் பெண்கள் ஆடைகளின்றி, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ கடந்த புதன்கிழமை வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மணிப்பூா் விவகாரத்தை எதிா்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமா் விளக்கமளிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.