இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில், இரண்டு பெண்களை ஆடைகளை அகற்றி, ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை மணிப்பூர் காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடந்த மே 4ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தின் விடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏழாவது குற்றவாளி தௌபால் மாவட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, குற்றவாளிகளான கபிசந்திரா, முக்கிய குற்றவாளி ஹேரோட்ஸ் ஆகியோரின் வீடுகளுக்கு, அதிருப்தி கும்பல் தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.