
கோப்புப்படம்
அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிளின் புகைப்படங்களை அம்மாநில அரசு மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்களை மத்திய குழுவிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தை பார்வையிட்ட 7 பேர் அடங்கிய மத்தியக் குழு இதனை தெரிவித்தது.
இதையும் படிக்க: மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எமனாக வந்த மும்பை இந்தியன்ஸ்!
உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் சி.ஜி.ரஜினி காந்தன் தலைமையிலான இந்தக் குழு கடந்த மூன்று நாள்களாக இரண்டு குழுக்களாக பிரிந்து அசாமின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது. இந்தக் குழு லக்கிம்பூர், திமாஜி, பிஸ்வநாத், சிராங், நல்பாரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது. இந்த ஆய்வின்போது வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவிடம் மாநில அரசு சார்பில் மத்திய அரசு விரைந்து வெள்ள நிவாரணத் தொகையை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.
அசாமில் இதுவரை மழை வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...